எய்ம்ஸ் மருத்துவமனையை காலம் தாழ்த்தாமல் அமைக்க வேண்டும் ஜி.கே.வாசன் கோரிக்கை

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட வேண்டும் என்பது தமிழக மக்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்தது.
எய்ம்ஸ் மருத்துவமனையை காலம் தாழ்த்தாமல் அமைக்க வேண்டும் ஜி.கே.வாசன் கோரிக்கை
Published on

சென்னை

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட வேண்டும் என்பது தமிழக மக்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்தது. அந்த கோரிக்கை நிறைவேற்றப்படும் வகையில் இப்போது மதுரைக்கு அருகேயுள்ள தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படுவதற்கான அறிவிப்பும் வெளியாகிவிட்டது. இனியாவது காலம் தாழ்த்தாமல் உடனடியாக பணிகளை தொடங்கி எய்ம்ஸ் மருத்துவமனையை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கட்டிமுடித்து, அதனை செயல்படுத்த வேண்டும்.

தமிழக மக்கள் நலன் காப்பதில் அதிலும் மக்களின் உடல்நலன் காப்பதில் தமிழக அரசுக்கு அதிக அக்கறை இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் எய்ம்ஸ் மருத்துவமனைத் திட்டம் திட்டமிட்டப்படி அனைத்து வசதிகளுடனும் நடைமுறைக்கு வந்து, மக்களுக்கு சிறப்பு மருத்துவச் சேவை தொடர்ந்து கிடைத்திட தனது பங்களிப்பை முறையாக அளித்திட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com