பிளாஸ்டிக் பாட்டிலுக்கு பதில் கண்ணாடி குப்பிகள்: சட்டமன்றத்தில் பின்பற்றலாம் - தமிழிசை சவுந்தரராஜன்

பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் வைக்க வேண்டாம் என்பதற்காக சட்டமன்றத்தில் அப்படி ஒரு ஏற்பாடு இருக்கிறது என்று நினைக்கிறேன் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
தமிழக முன்னாள் பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்
Published on

சென்னை,

தமிழக சட்டசபையில் இன்று நடைபெற்ற கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான 2-வது நாள் விவாதத்தில், தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசினார். அதில், 'நான் சட்டசபைக்கு வந்த நாளில் இருந்து பார்க்கிறேன், அவை பணியாளர்கள் எல்லா உறுப்பினர்களுக்கும் டம்ளரில் தண்ணீர் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்' என்றார்.

கோரிக்கை

அதை பார்க்கும் நமக்கே இது கஷ்டமாக இருக்கிறது. முதல்-அமைச்சருக்கு ஒரு கோரிக்கை. உறுப்பினர்கள் ஒவ்வொருவர் இருக்கையிலும் கண்ணாடி பாட்டிலில் தண்ணீர் வைக்கலாம். இதனால், அரசுக்கு பெரிய செலவும் ஏற்படாது.

இந்த நிலையில் தமிழக முன்னாள் பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

இன்று சட்டமன்றத்தில் தண்ணீர் கொடுப்பதை பற்றிய ஒரு கோரிக்கையை சகோதரி பிரேமலதாவைக்கவும் அதற்கு பதிலான சில விவாதங்கள் நடந்ததையும் தொலைக்காட்சியில் பார்த்தேன்... பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் வைக்க வேண்டாம் என்பதற்காக சட்டமன்றத்தில் அப்படி ஒரு ஏற்பாடு இருக்கிறது என்று நினைக்கிறேன்.

கண்ணாடி குப்பி

நான் தெலங்கானா கவர்னராக பொறுப்பேற்றவுடன், தெலங்கானா ராஜ்பவனை முற்றிலும் பிளாஸ்டிக் இல்லாத ராஜ்பவனாக (Plastic-free Raj Bhavan) ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே மாற்றினேன். அப்பொழுது கண்ணாடி குப்பிகளை வாங்கி, வரும் விருந்தினர்களுக்கெல்லாம் அதில் கொடுக்கும் பழக்கத்தை ஏற்படுத்தினோம்.

அந்த கண்ணாடி குப்பிகளின் மாதிரி படத்தை இங்கே பதிவிடுகிறேன். சட்டமன்றத்திலும் இதை பின்பற்றலாம். இவை சிறிய குப்பிகள் என்பதால், வீசினாலும் காயம் ஏற்படாத அளவிலேயே இருக்கின்றன.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com