கடற்பசு பாதுகாப்புக்கு உலகளாவிய அங்கீகாரம் - மு.க.ஸ்டாலின் பெருமிதம்


கடற்பசு பாதுகாப்புக்கு உலகளாவிய அங்கீகாரம் - மு.க.ஸ்டாலின் பெருமிதம்
x

திராவிட மாடல் அரசு அறிவித்த கடற்பசுப் பாதுகாப்பகத்துக்கு உலகளாவிய அங்கீகாரம் கிடைத்துள்ளதாக முதல்-அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;

தஞ்சை - புதுக்கோட்டை மாவட்டங்களில் அமைந்த பாக் வளைகுடாவில், நமது திராவிட மாடல் அரசு அறிவித்த இந்தியாவின் முதல் கடற்பசுப் பாதுகாப்பகத்துக்கு உலகளாவிய அங்கீகாரம்!

இந்த முன்னோடி முயற்சியைப் பாராட்டும் தீர்மானம், அபுதாபியில் நடைபெறவுள்ள ஐ.யூ.சி.என் உலக பாதுகாப்பு மாநாடுக்கு முன் ஆன்லைன் வாக்கெடுப்பில் நிறைவேற்றப்பட்டது.

இந்த முயற்சியில் பங்கேற்ற தமிழக வனத்துறை, ஓம்கார் அறக்கட்டளை உள்ளிட்ட அனைவருக்கும் பாராட்டுகள்!"

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story