திற்பரப்பில் சாரல் மழையுடன் 'குளு குளு' சீசன்

திற்பரப்பில் சாரல் மழையுடன் குளு குளு சீசன் நிலவி வரும் நிலையில் சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து உற்சாகம் அடைந்தனர்.
திற்பரப்பில் சாரல் மழையுடன் 'குளு குளு' சீசன்
Published on

திருவட்டார்,

திற்பரப்பில் சாரல் மழையுடன் குளு குளு சீசன் நிலவி வரும் நிலையில் சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து உற்சாகம் அடைந்தனர்.

அருவியில் குளித்து மகிழ்ந்தனர்

குமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் திற்பரப்பு அருவி முக்கிய இடத்தை பற்றுள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அருவி பகுதியில் அவ்வப்போது சாரல் மழை பெய்து வருவதால் தற்போது 'குளு குளு' சீசன் நிலவுகிறது.

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான நேற்று அருவிக்கு ஏராளமானோர் வந்தனர். அவர்கள் அருவியில் ஆசைதீர குளித்து மகிழ்ந்தனர். கோதையாற்றில் தற்போது தண்ணீர் வரத்து மிதமாக பாய்வதால் அருவியின் மேல் பகுதியில் உள்ள தடுப்பணையில் அதிக அளவு தண்ணீர் உள்ளது.

படகு சவாரி

அருவியில் குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள் பின்னர் தடுப்பணையில் சென்று உல்லாச படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். மேலும், சிறுவர் பூங்கா, அலங்கார நீரூற்று, பச்சைபசேல் புல்வெளி தோட்டம் ஆகியவற்றை பார்த்து ரசித்தனர்.

சுற்றுலா பயணிகளின் வருகையால் திற்பரப்பு பகுதி நேற்று களைகட்டியது.

------------

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com