10 கிலோ ஆடு ரூ.5 ஆயிரத்துக்கு விற்பனை

கன்னிவாடி ஆட்டுச் சந்தையில் 10 கிலோ ஆடு ரூ.5 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.
10 கிலோ ஆடு ரூ.5 ஆயிரத்துக்கு விற்பனை
Published on

கன்னிவாடி ஆட்டுச் சந்தையில் 10 கிலோ ஆடு ரூ.5 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.

ஆட்டுச்சந்தை

தமிழ்நாட்டில் நடைபெறும் முக்கிய ஆட்டுச் சந்தைகளில் ஒன்று கன்னிவாடி சந்தை. இந்த சந்தை வாரந்தோறும் பிரதி வெள்ளிக்கிழமை நடைபெற்று வருகிறது.இந்த சந்தைக்கு கன்னிவாடி, மூலனூர், வெள்ளகோவில், பரமத்தி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.

அவற்றை வாங்குவதற்கு சென்னை, மதுரை, திருச்சி, கோவை, பொள்ளாச்சி, உடுமலை போன்ற நகரங்களில் இருந்தும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வருகிறார்கள். கடந்த 2 வாரங்களாகவே கடும் வெப்பம் காரணமாக வியாபாரம் குறைந்து காணப்பட்டது.

ஆடுகள் வரத்து

அதன்படி நேற்று நடந்த சந்தையில் 3 ஆயிரம் ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. சந்தையில் 10 கிலோ எடை கொண்ட ஆடு ரூ.5 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. ஆடுகளுக்கு விலை குறைந்து இருந்ததால் ஆடுகளை விவசாயிகள் விற்பனை செய்யாமல் திருப்பி கொண்டு சென்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com