கிடா வெட்டு இல்லை ஆனால் விருந்து உண்டு மதுரை மாவட்ட ரசிகர் மன்றம் அறிவிப்பு

ஜனவரி 7ந்தேதி கிடா வெட்டு இல்லை; ஆனால் விருந்து உண்டு என மதுரை மாவட்ட ரசிகர் மன்றம் அறிவித்து உள்ளது. #rajinikanth #peta
கிடா வெட்டு இல்லை ஆனால் விருந்து உண்டு மதுரை மாவட்ட ரசிகர் மன்றம் அறிவிப்பு
Published on

சென்னை

கடந்த ஆண்டு டிசம்பர் கடைசி வாரத்தில் இரண்டாம் கட்டமாக ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்து கொண்டார். அப்போது, டிசம்பர் 31 ஆம் தேதி அரசியலுக்கு வருகிறேன் என அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.

மேலும் வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன் எனவும் அதற்கு முன்பு ஒவ்வொரு தெருவிலும் தனது ரசிகர் மன்றம் தொடங்கப்பட வேண்டும் எனவும் ரசிகர்களிடம் குறிப்பிட்டார்.

முதல் கட்டமாக கட்சியின் இளைஞர் அணி, வழக்கறிஞர் அணி உள்ளிட்ட அணிகளை உருவாக்கும் பணிகளை மேற்கொள்ளவும் நற்பணி இயக்க நிர்வாகிகளுக்கு ரஜினி உத்தரவிட்டுள்ளார்.

உண்மை, உழைப்பு, உயர்வு இதுதான் தாரக மந்திரம். நல்லதே நினைப்போம். நல்லதே செய்வோம். நல்லதே நடக்கும். இதுதான் நமது கொள்கை. வரும் தேர்தலில், நம்ம படையும் இருக்கும் என்று ரஜினிகாந்த் கூறினார்.

3வது நாள் ரசிகர் சந்திப்பு நிகழ்ச்சியில் டிசம்பர் 28 ந்தேதி பேசும் போது மதுரை, சேலம், விருதுநகரில் இருந்தெல்லாம் ரசிகர்கள் வந்து இருக்கிறீர்கள். உங்களுக்கெல்லாம் கிடா வெட்டி கறி சோறு போட வேண்டும் என்று ஆசை இருக்கிறது. ஆனால் இந்த ராகவேந்திரா மண்டபம் முழுக்க சைவம். அதை வேறு இடத்தில் வேறுமாதிரி எப்போதாவது வைத்துக்கொள்வோம். உங்களை பார்க்கும்போது உங்களின் உற்சாகத்தையும் உணர்ச்சிகளையும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.என அகூறினார்

இதை தொடர்ந்து மதுரையில் சுமார் ஆயிரம் பேருக்கு ஆட்டுக்கறி விருந்து கொடுக்க ரஜினி ரசிகர்களால் ஏற்பாடு செயபட்டு வருகின்றது

இந்நிலையில், வரும் 7 ந்தேதி நடக்கவிருக்கும் ரசிகர்களுக்கான ஆட்டுக்கறி விருந்தை தடுத்து நிறுத்த கோரி நடிகர் ரஜினிகாந்துக்கு பீட்டா அமைப்பு கடிதம் எழுதி உள்ளது.

இதை தொடர்ந்து மதுரை அழகர்கோயிலில் ஜனவரி 7ந்தேதி கிடா வெட்டு இல்லை; ஆனால் விருந்து உண்டு என மதுரை மாவட்ட ரசிகர் மன்றம் அறிவித்து உள்ளது.விழா அழைப்பிதழில் அழகர் கோயிலில் கிடா வெட்டி விருந்து நடைபெறும் என்று குறிப்பிடவில்லை என மதுரை மாவட்ட ரஜினி ரசிகர் மன்றம் விளக்கம் அளித்து உள்ளது.

#rajinikanth / #beta / #madurairajinifans

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com