ஆடுகள் திருட்டு

சிவகாசி அருக ஆடுகள் திருட்டு போனது.
ஆடுகள் திருட்டு
Published on

சிவகாசி, 

சிவகாசி தாலுகாவுக்கு உட்பட்ட நடையனேரி கிராமத்தை சேர்ந்தவர் லோகமணி (வயது 43). இவர் ஆடுகளை வளர்த்து விற்பனை செய்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று இவருக்கு சொந்தமான 4 ஆடுகள் மாயமானது. இதுகுறித்து லோகமணி எம்.புதுப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆடுகளை திருடி சென்றவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com