ஆடு திருட்டு

சாத்தூர் அருகே ஆட்டினை திருடி சென்றனர்.
ஆடு திருட்டு
Published on

சாத்தூர், 

சாத்தூர் தாலுகா மேலஒட்டம்பட்டியை சேர்ந்தவர் குமார் (வயது 45). இவர் தனது வீட்டு அருகில் கொட்டகை அமைத்து 15 ஆடுகளை வளர்த்து வருகிறார். இவரது தந்தை இந்த ஆடுகளை காலை மேய்ச்சலுக்கு ஓட்டி சென்று விட்டு திரும்பி மதியம் கொட்டகையில் அடைத்துள்ளார். மீண்டும் மாலை கொட்டகைக்கு சென்று பார்த்தபோது ஒரு ஆடு திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து சாத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com