ஆடு திருடியவர் கைது

சேரன்மாதேவி அருகே ஆடு திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
ஆடு திருடியவர் கைது
Published on

சேரன்மாதேவி:

வீரவநல்லூர் அருகே உள்ள வெள்ளாங்குழி இந்திரா காலனியை சேர்ந்த ரஞ்சித்சிங் (வயது 45) என்பவர் தனது வீட்டின் முன்பு ஆடுகளை கட்டி வைத்தார். பின்னர் திரும்பி வந்து பார்த்த போது ஆடுகளை காணவில்லை. இதுகுறித்து ரஞ்சித்சிங் வீரவநல்லூர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் வீரவநல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் வெள்ளாங்குழி, தெற்கு தெருவை சேர்ந்த மகாராஜன் (24), என்பவர் ஆடுகளை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் காவுராஜன் வழக்குப்பதிவு செய்து மகாராஜனை நேற்று கைது செய்தார். மேலும் அவரிடமிருந்து 2 ஆடுகளை பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com