ஆடு திருடியவர் கைது

நெல்லை அருகே ஆடு திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
ஆடு திருடியவர் கைது
Published on

நெல்லை அருகே உள்ள ராஜவல்லிபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் வலதி (வயது 47). இவர் வீட்டில் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். சம்பவத்தன்று ராஜவல்லிபுரம் பெரியகுளம் அருகே மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகளில் ஒரு ஆட்டை காணவில்லை. இதுகுறித்து வலதி, தாழையூத்து போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் செல்லத்தங்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில், அதே ஊரை சேர்ந்த அம்மாகுட்டி (30) என்பவர் ஆடு திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அம்மா குட்டியை கைது செய்து, அவரிடமிருந்து ஆட்டையும் பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com