ஆடு திருடியவர் கைது

வீரவநல்லூர் அருகே ஆடு திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
ஆடு திருடியவர் கைது
Published on

சேரன்மாதேவி:

வீரவநல்லூர் அருகே உள்ள காருகுறிச்சி பஜார் தெருவை சேர்ந்த ரேவதி (43) என்பவர் சொந்தமாக ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். நேற்று அவரது வீட்டு முன் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தபோது அவருடைய ஒரு ஆட்டை அடையாளம் தெரியாத நபர் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ரேவதி வீரவநல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ஆடு திருட்டில் ஈடுபட்டது அடையகருங்குளம் மந்தையர் காலனியை சேர்ந்த இளையராஜா (வயது 30) என்பது தெரியவந்தது. இதையடுத்து இளையராஜாவை போலீசார் நேற்று கைது செய்து அவரிடமிருந்து திருடிச் சென்ற ஒரு ஆட்டையும் பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com