முக்கூடல் சந்தையில் ரூ.1½கோடிக்கு ஆடுகள் விற்பனை

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு முக்கூடல் சந்தையில் ரூ.1½கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.
முக்கூடல் சந்தையில் ரூ.1½கோடிக்கு ஆடுகள் விற்பனை
Published on

முக்கூடல்:

முக்கூடலில் ஆடு மற்றும் கோழி சந்தை வாரந்தோறும் வெள்ளிக்கிழமை நடைபெறுவது வழக்கம். பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நேற்று சந்தைக்கு பலவிதமான ஜாதி ஆடுகளும், வீடுகளில் வளர்க்கப்பட்ட வித்தியாசமான ஆடுகளும் விற்பனைக்கு வந்தன. வியாபாரிகள் மொத்த மொத்தமாக ஆடுகளை வாங்கி அங்கேயே பட்டியில் அடைத்தும், மேற்கொண்டு ஆடுகளை வாங்கி வாகனங்களில் ஏற்றிச் சென்றனர். நேற்று நடைபெற்ற சந்தையில் சுமார் ரூ.1.5 கோடிக்கு ஆடு, கோழி விற்பனை நடைபெற்றதாக சந்தை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com