வெளிநாடு செல்வதால் முதலீடுகள் வராது: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மறைமுக விமர்சனம்

வெளிநாடு செல்வதால் முதலீடுகள் வராது என்று தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மறைமுகமாக விமர்சனம் செய்யும் வகையில் பேசியுள்ளார்.
வெளிநாடு செல்வதால் முதலீடுகள் வராது: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மறைமுக விமர்சனம்
Published on

உதகை,

வெளிநாடுகள் செல்வதால் முதலீடுகள் வராது என்று தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பேசியுள்ளார். உதகையில் நடைபெற்ற துணை வேந்தர்கள் மாநாட்டில் பேசிய கவர்னர் ஆர்.என்.ரவி, நாம் கேட்பதாலோ, நேரில் சென்று தொழில் அதிபர்களுடன் கேட்பதாலோ முதலீடுகள் வராது. உலகளாவிய தொழில் முதலீடுகளை ஏற்பதற்கு சிறந்த சூழலை உருவாக்க வேண்டும். முதலீடுகளை ஈர்க்க திறமையான மற்றும் பொருத்தமற்ற மனித ஆற்றலை உருவாக்குவதே சிறந்த வழியாகும்.

முதலில் தமிழகத்தில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான சூழலை உருவாக்க வேண்டும். தமிழ்நாட்டுக்கு இணையான முதலீடுகளை அரியானா மாநிலம் ஈர்த்து வருகிறது. நமது இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியில் 70 விழுக்காடு இந்திய மொழிகள் சார்ந்த துறைகளில் இருந்தே வருகிறது. பல்துறை திறன்களை வழங்குவதன் மூலம் காலத்திற்கு பொருத்தமான கல்வியை தருவதே புதிய கல்விக் கொள்கை ஆகும்" என்று தெரிவித்துள்ளார்.

தமிழக முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின், அண்மையில் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு 9 நாட்கள் பயணமாக சென்று இருந்தார். இந்த நிலையில், தமிழக கவர்னர் மறைமுகமாக விமர்சனம் செய்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு அடுத்த ஆண்டு முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com