

சென்னை,
உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்று தங்க பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை தேடி தந்துள்ள பிரியா மாலிக்கிற்கு பா.ம.க. இளைஞரணி தலைவா அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ஹங்கேரி புடாபெஸ்ட் நகரில் நடைபெற்று வரும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகளின் 73 கிலோ எடை பிரிவில் பெலாரஸ் வீராங்கனையை வீழ்த்தி தங்க பதக்கம் வென்றுள்ள இந்திய வீராங்கனை பிரியா மாலிக்கிற்கு பாராட்டுகள். அவரது சாதனை பயணம் தொடர வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.