ஆடு மேய்த்த பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு

ஆடு மேய்த்த பெண்ணிடம் மர்ம ஆசாமி தங்க சங்கிலி யை பறித்து சென்றார்.
ஆடு மேய்த்த பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு
Published on

ஜீயபுரம், ஜூன்.7-

ஆடு மேய்த்த பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்த மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.

சங்கிலி பறிப்பு

பெட்டவாய்த்தலை அருகே உள்ள பெருகமணி கிராமத்தை சேர்ந்தவர் ராமநாதன். இவருடைய மனைவி அம்சவள்ளி (வயது 50). இவர் பெருகமணி சுடுகாடு பகுதியில் ஆடு மேய்த்து கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு வந்த ஒரு மர்ம ஆசாமி அவரை கீழே தள்ளிவிட்டு அவரது கழுத்தில் கிடந்த ஒரு பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டார். இது குறித்த புகாரின் பேரில் பெட்டவாய்த்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com