சென்னையில் ரூ.18 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல்

உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் நகை, பணம் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர்.
சென்னையில் ரூ.18 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல்
Published on

சென்னை,

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 23-ந் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தது. உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் நகை, பணம் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர். வாக்காளர்களுக்குபணம் கொண்டு செல்லப்படுகிறதா? என்பதை கண்டறிய தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை ஏழுகிணறு பகுதியில் நகைக்கடைக்கு உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.18 கோடி மதிப்பிலான தங்க நகைகளை தேர்தல் பறக்கும் படையினர் சோதனையின் போது கைப்பற்றினர். கைப்பற்றப்பட்ட தங்க நகைகளை தேர்தல் பறக்கும் படையினர் வருமானவரித் துறையிடம் ஒப்படைத்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com