தேசிய பாரா ஒலிம்பிக் நீச்சல் போட்டி: தங்கப் பதக்கம் வென்ற மாற்றுத்திறனாளி ஆசிரியருக்கு தர்மபுரி கலெக்டர் பாராட்டு

தேசிய பாரா ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மாற்றுத்திறனாளி ஆசிரியருக்கு தர்மபுரி கலெக்டர் பாராட்டு தெரிவித்தார்.
தேசிய பாரா ஒலிம்பிக் நீச்சல் போட்டி: தங்கப் பதக்கம் வென்ற மாற்றுத்திறனாளி ஆசிரியருக்கு தர்மபுரி கலெக்டர் பாராட்டு
Published on

தர்மபுரி,

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் 21-வது தேசிய பாரா ஒலிம்பிக் நீச்சல் போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டிகளில் இந்தியா முழுவதிலும் இருந்து பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர்.

இதில் தர்மபுரி மாவட்டம் மூக்கனஅள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியரும், மாற்றுத்திறனாளியுமான வெங்கடேசன் என்பவர் பிரிஸ்டாப் 50 மீட்டர் பிரிவு நீச்சல் போட்டியில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். இதேபோன்று 100 மீட்டர் பிரிவு நீச்சல் போட்டியில் அவர் 2-ம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கமும் வென்றார்.

இந்த சாதனை படைத்த மாற்றுத்திறனாளி ஆசிரியரை தர்மபுரி மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். அப்போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கணேசமூர்த்தி மற்றும் ஆசிரியர்கள் உடன் இருந்தனர். இதேபோல் மாவட்டம் முழுவதிலும் உள்ள ஆசிரியர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com