209 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம்

ஆண்டிமடம் ஒன்றியத்தில் 209 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டது.
209 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம்
Published on

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஒன்றியத்தில் 2018-19-ம் ஆண்டுக்கான தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 209 பயனாளிகளுக்கு தலா 8 கிராம் தங்க நாணயத்தை க.சொ.க.கண்ணன் எம்.எல்.ஏ. வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் அன்பரசி, ஆண்டிமடம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜா, நாராயணன் (கிராம ஊராட்சி), சமூக நல அலுவலர்கள், மகளிர் ஊர் நல அலுவலர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com