தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ளது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

சென்னை,

தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக மக்களுக்கு கண்ணாமூச்சி காட்டி வருகிறது. இந்த நிலையில், சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது.

அதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.44,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,590-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல வெள்ளியின் விலை கிராமுக்கு 60 காசுகள் குறைந்து ரூ.75.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com