தங்கம் விலை புதிய உச்சம்: சவரன் ரூ.40 ஆயிரத்தை கடந்தது

வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு ஆபரணத்தங்கத்தின் விலை சவரன் 40 ஆயிரத்தை கடந்துள்ளது.
தங்கம் விலை புதிய உச்சம்: சவரன் ரூ.40 ஆயிரத்தை கடந்தது
Published on

சென்னை,

சர்வதேச அளவில் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ளதால் பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்துள்ளதால் தங்கத்தின் தேவை அதிகரித்து அதன் விலை உயர்ந்து வருகிறது.

கொரோனா வைரஸ் பாதிப்பால் தெழில்துறை தேக்கம் குறித்த பீதி நிலவி வரும் நிலையில், தங்கம் விலையில் தற்போது ஏற்ற இறக்கங்கள் நிலவி வருகிறன்றன. இந்தநிலையில் இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது.

இந்த நிலையில், வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு ஆபரணத்தங்கத்தின் விலை சவரன் 40 ஆயிரத்தை கடந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.872 உயர்ந்து ரூ.40,104க்கு விற்பனையாகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com