சென்னையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.72 உயர்வு

சென்னையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.72 உயர்ந்து ஒரு பவுன் தங்கம் ரூ.39,104க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.72 உயர்வு
Published on

சென்னை,

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சர்வதேச பொருளாதார சூழ்நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் மற்றும் அமெரிக்க டாலர் மதிப்பில் சரிவு போன்றவற்றால் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. கடந்த ஜூலை மாத இறுதியில் ஒரு பவுன் ஆபரண தங்கத்தின் விலை ரூ.41 ஆயிரத்திற்கு மேல் சென்றது.

இதன்பின்னர் தங்கம் விலை கடந்த ஆகஸ்டு 7ந்தேதிக்கு பிறகு சரிவை சந்தித்தது. கடந்த ஆகஸ்டு மாதம் 9ந்தேதி முதல் 12ந்தேதி வரை 4 நாட்களில் தங்கத்தின் விலை ரூ.2,400 வரை குறைந்தது. இதன்படி கடந்த 12ந்தேதி தங்கத்தின் விலை, அதற்கு முந்தைய நாள் விலையில் இருந்து ரூ.1,832 குறைந்து ரூ.40,104க்கு விற்பனையானது.

இதன்பின்னர், சென்னையில் கடந்த ஆகஸ்டு மாத இறுதியில் தொடர்ந்து விலை குறைந்தது. இதன்படி, கடந்த ஆகஸ்டு மாதம் 24ந்தேதி பவுனுக்கு 360 ரூபாய் குறைந்து ரூ.40,024க்கும், 25ந்தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.39,368க்கும், 26ந்தேதி ரூ.39,224க்கும் மற்றும் 28ந்தேதி ரூ.39,176க்கும் தங்கம் விற்பனை செய்யப்பட்டது.

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை பவுன் ஒன்றுக்கு இன்று ரூ.72 உயர்ந்துள்ளது. நேற்றைய விலையுடன் ஒப்பிடும்பேது கிராமுக்கு ரூ.9 உயர்ந்து ஒரு கிராம் ரூ.4,888 ஆக உள்ளது. இதன்படி ஒரு பவுன் தங்கம் ரூ.39,104க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலையும் கிலேவுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு கிலே பார் வெள்ளி ரூ.69 ஆயிரத்து 300 ஆக உள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com