தங்கம் விலை மாற்றமின்றி விற்பனை

சென்னையில் தங்கம் விலை இன்று மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

சென்னை,

தங்கம் விலை கடந்த மாதத்தில் கிடுகிடுவென அதிகரித்து ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்தை கடந்தது. நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு எட்டாக் கனியாகிவிடும் என்று நினைக்கத் தோன்றும் அளவுக்கு தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்தது. இந்த நிலையில் அட்சய திருதியை முன்னிட்டு தங்கம் விலை ஒரே நாளில் மூன்று முறை அதிகரித்து அதிர்ச்சியளித்தது.

நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்தது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கம் விலை மாற்றமின்றி ஒரு சவரன் ரூ.54,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.6,860-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.30 உயர்ந்து ரூ.100.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com