நகை திருடியவர் கைது

கபிஸ்தலம் அருகே வீட்டின் கதவை திறந்து நகை திருடியவர் கைது செய்யப்பட்டார்.
நகை திருடியவர் கைது
Published on

கபிஸ்தலம்;

கபிஸ்தலம் அருகே உள்ள விசித்திரராஜபுரம் மெயின் ரோட்டை சோந்தவர் கோகிலா (வயது30). இவர் சம்பவத்தன்று தனது வீட்டை பூட்டி விட்டு தன் உறவினர் வீட்டுக்கு சென்றார். மாலை அவா வீடு திரும்பிய போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. இதனால் அவர் உள்ளே சென்ற போது வீட்டிலிருந்த தாலிச்சங்கிலியில் அணியக்கூடிய தங்ககாசு, மாங்காய், குண்டு என சுமார் 2 கிராம் மதிப்புள்ள தங்க நகைகளை மர்ம நபர் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து கோகிலா கபிஸ்தலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை திருடி சென்ற மர்ம நபரை தேடி வந்தனர். இந்தநிலையில் கபிஸ்தலம் பெட்ரோல் பங்க் அருகில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கபிஸ்தலம் அருகே உள்ள கருப்பூர் மேலத்தெருவை சேர்ந்த நடராஜன் மகன் மோகன்(38) என்பதும் அவா கோகிலா வீட்டில் இருந்து நகையை திருடி சென்றதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் மோகனை கைது செய்து நகைகளை பறிமுதல் செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com