திருச்சி விமான நிலையத்தில் மலேசியாவில் இருந்து கடத்தி வந்த ரூ.71¾ லட்சம் தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் மலேசியாவில் இருந்து கடத்தி வந்த ரூ.71¾ லட்சம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சி விமான நிலையத்தில் மலேசியாவில் இருந்து கடத்தி வந்த ரூ.71¾ லட்சம் தங்கம் பறிமுதல்
Published on: 

திருச்சி விமான நிலையத்தில் மலேசியாவில் இருந்து கடத்தி வந்த ரூ.71 லட்சம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

சோதனை

திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், சார்ஜா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மேற்கண்ட நாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வருவம் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது.

இதைத்தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தும் தங்கம் கடத்தல் சம்பவம் தொடர் கதையாக உள்ளது. குறிப்பாக துபாய் மற்றும் சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் விமானங்களில் அதிக அளவில் பயணிகள் தங்கத்தை கடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

கடத்தல் தங்கம்

இந்த நிலையில் நேற்று மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் திருச்சி விமான நிலையத்துக்கு வந்தது. இதைத்தொடர்ந்து வான்நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் விமான பயணிகளை சோதனை செய்தனர். இதில் 2 பயணிகளின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சோதனை செய்ததில், ஆசனவாயில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.

பின்னர் அவர்களிடம் இருந்து ரூ.71 லட்சத்து 72 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 188 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தங்கம் கடத்தி வந்த 2 பயணிகளிடம் அதிகாரிகள் தெடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

---

X

Daily Thanthi
www.dailythanthi.com