தர்மபுரி சட்டமன்ற தொகுதியில்தி.மு.க. மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழிஅமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வழங்கினார்

தர்மபுரி சட்டமன்ற தொகுதியில்தி.மு.க. மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழிஅமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வழங்கினார்
Published on

தர்மபுரி:

கருணாநிதி நூற்றாண்டு விழா மற்றும் தி.மு.க. 75-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு தர்மபுரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நகர முன்னாள் அவைத் தலைவர் மேச்சேரி, முன்னாள் கவுன்சிலர்கள் கிருஷ்ணன், வஜ்ஜிரம் உள்ளிட்ட 19 கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமை தாங்கி மூத்த நிர்வாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து பொற்கிழி வழங்கி கவுரவித்தார். தொடர்ந்து மாவட்ட செயலாளர்கள் தடங்கம் சுப்பிரமணி, பி.பழனியப்பன் ஆகியோரும் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் அவர்கள் கடந்த காலங்களில் நடந்த நிகழ்ச்சிகளின் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் நகர செயலாளர் நாட்டான் மாது, முன்னாள் எம்.பி. தாமரைச்செல்வன், தலைமை செயற்குழு உறுப்பினர் தர்மசெல்வன், மாவட்ட பொருளாளர் தங்கமணி, மாவட்ட துணை செயலாளர்கள் உமாசங்கர், ரேணுகா தேவி, ஆறுமுகம், மாநில வர்த்தகர் அணி துணை செயலாளர் சத்தியமூர்த்தி, கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் எம்.ஜி.எஸ்.வெங்கடேஸ்வரன், துணை அமைப்பாளர் வக்கீல் அசோக்குமார், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பெரியண்ணன், மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கவுதம் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதேபோன்று தர்மபுரி நகரில் உள்ள நரசய்யர் குளம், கடைவீதி, மல்லாபுரம், எர்ரப்பட்டி, ஏலகிரி ஆகிய இடங்களில் தி.மு.க. கொடியை அமைச்சர் ஏற்றி வைத்து பேசினார். தொடர்ந்து இந்த நிகழ்ச்சிகளில் பொது மக்களுக்கு அமைச்சர் இனிப்பு வழங்கினார். இந்த நிகழ்ச்சிகளில் ஒன்றிய செயலாளர்கள் சண்முகம், வைகுந்தன், மல்லமுத்து, சேட்டு, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் முத்துலட்சுமி, பொதுக்குழு உறுப்பினர்கள் துரைசாமி, நடராஜ், நகர நிர்வாகிகள் முல்லைவேந்தன், அன்பழகன், சுருளிராஜன் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com