பயணிகளுக்கு குட் நியூஸ்: காவேரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் புத்தம் புது எல்.எச்.பி. பெட்டிகள் இணைப்பு

அசோகாபுரத்தில் இருந்து ஜூலை 1-ந் தேதி புறப்படும் காவேரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் எல்.எச்.பி. பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.
எல்.எச்.பி. பெட்டிகள்
Published on

சென்னை,

சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் - கர்நாடக மாநிலம் மைசூரு அருகே உள்ள அசோகாபுரம் இடையே காவேரி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் பெட்டிகள் புத்தம் புதிய எல்.எச்.பி. பெட்டிகளாக மாற்றப்பட இருக்கின்றன.

எல்.எச்.பி. பெட்டி

எல்.எச்.பி. பெட்டி என்பது இந்திய ரெயில்வேயில் பயன்படுத்தப்படும் அதிநவீன மற்றும் பாதுகாப்பான பயணிகள் பெட்டியாகும். ஜெர்மனி தொழில்நுட்பத்துடன், கபூர்தலாவில் உள்ள ரெயில் பெட்டி தொழிற்சாலையில் இவை தயாரிக்கப்படுகின்றன.

எளிதில் தீப்பற்றாத மூலப்பொருட்களால் ஆனவை மற்றும் நவீன புகை கண்டறியும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. மணிக்கு 130 முதல் 160 கி.மீ வேகத்தில் செல்லக்கூடியவை. அதிர்வுகள் குறைவாக இருப்பதால் பயணம் மிகவும் வசதியாக இருக்கும்.

இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

காவேரி எக்ஸ்பிரஸ்

சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரலில் இருந்து அசோகாபுரத்திற்கு செல்லும் காவேரி எக்ஸ்பிரஸ் ரெயிலின் பெட்டிகள் நாளை (30-ந் தேதி) எல்.எச்.பி. பெட்டிகளாக மாற்றம் செய்யப்படுகின்றன. மறுமார்க்கத்தில், அசோகாபுரத்தில் இருந்து ஜூலை 1-ந் தேதி புறப்படும் காவேரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் எல்.எச்.பி. பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

அதாவது, 1 ஏசி முதல் வகுப்பு பெட்டி, 2 ஏசி 2-ம் வகுப்பு பெட்டிகள், 2 ஏசி 3-ம் வகுப்பு பெட்டிகள், 10 தூங்கும் வசதி பெட்டிகள்,4 பொதுப் பெட்டிகள், 1 இரண்டாம் வகுப்பு பெட்டி, 1 சரக்கு பெட்டி ஆகியவை இணைக்கப்பட்டிருக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com