விளையாட்டு வீரர்களுக்கு குட் நியூஸ் - தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை திட்டம் உள்ளிட்ட 3 வகையான சிறப்பு உதவித்தொகைத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
Published on

சென்னை,

விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகைத் திட்டத்திற்கு, இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை திட்டம் உள்ளிட்ட 3 வகையான சிறப்பு உதவித்தொகைத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்தநிலையில் இத்திட்டங்கள் மூலம் பயன்பெற விரும்பும் விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது இன்று முதல் வரும் 20 ஆம் தேதி மாலை 5 மணி வரை விளையாட்டு வீரர்கள் தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்தாண்டு இறுதியில் இத்திட்டங்களுக்கு விண்ணப்பித்தவர்கள், அதன்பின்னர் பன்னாட்டு மற்றும் தேசிய அளவில் பெற்ற வெற்றியின் விவரங்களை, Registration ID மூலம் புதுப்பித்துக்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com