

=-=சென்னை,
தமிழகத்தில், மதுக் கடைகளில் பணிபுரி யும் ஊழியர்களுக்கு, ஆண்டுக்கு ஒரு முறை, 20 ஆயிரம் ரூபாய் பண்டிகை முன்பணம் வழங்க, மாவட்ட மேலாளர்களுக்கு, டாஸ்மாக் நிறுவன நிர்வாக இயக்குநர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம், சில்லரை கடைகள் வாயிலாக, மது வகைகளை விற்பனை செய்கிறது.
இந்தக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, ஆண்டுக்கு ஒரு முறை, 20 ஆயிரம் ரூபாய் பண்டிகை முன்பணம் அறிவிக்கப்படும். அதன்படி, ஊழியர்கள் தங்கள் விருப்பப்படி பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான், பக்ரீத் உள்ளிட்ட ஏதேனும் ஒரு பண்டிகையை தேர்வு செய்து, முன்பணம் பெறலாம்.
ஒருவருக்கு ஆண்டில் ஒரு முறை மட்டுமே, இந்த முன்பணம் வட்டி இல்லாமல் வழங்கப்படும். இத்தொகை, ஊழியரின் மாத ஊதியத்தில் இருந்து, மாதம் 2,000 ரூபாய் வீதம், 10 மாதங்கள் பிடித்தம் செய்யப்படும்.