

சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தாம்பரம் - ராமேஸ்வரம் இடையே தினமும் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்கள் 16103/16104) வரும் 16-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் பரிசார்த்த முறையில் பண்ருட்டி ரெயில் நிலையத்தில் நின்று செல்லும்.
அதாவது, தாம்பரத்தில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி செல்லும்போது, இரவு 9.03 மணி முதல் 1 நிமிடமும், ராமேஸ்வரத்தில் இருந்து தாம்பரம் திரும்பும்போது இரவு 11.49 மணி முதல் 1 நிமிடமும் நின்று செல்லும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தற்போது, பரிசார்த்த முறையிலேயே தாம்பரம் - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் பண்ருட்டியில் நின்று செல்லும். பயணிகளிடம் கிடைக்க இருக்க வரவேற்பை பொறுத்தே அது நிரந்தரமாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.