கடையின் பூட்டை உடைத்து பணம், பொருட்கள் திருட்டு

பாபநாசத்தில் கடையின் பூட்டை உடைத்து பணம், பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
கடையின் பூட்டை உடைத்து பணம், பொருட்கள் திருட்டு
Published on

பாபநாசம்;

பாபநாசத்தில் கடையின் பூட்டை உடைத்து பணம், பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

உதிரி பாக கடை

பாபநாசம் திருப்பாலைத்துறை மெயின் ரோடு பகுதியை சோந்தவர் சேக்அலாவுதீன்(வயது55). இவர் பாபநாசம் ரயில் நிலையம் மெயின் ரோட்டில் இருசக்கர வாகன உதிரி பாகங்கள் கடை வைத்துள்ளார். நேற்றுமுன்தினம் சேக்அலாவுதீன் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி யாரோ சில மர்ம மனிதர்கள் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் மதிப்புள்ள மிஷினரி பொருட்கள் டூல்ஸ் மற்றும் இரண்டு சக்கர உதிரி பாகங்கள், ரூ.18 ஆயிரம் மதிப்புள்ள கண்காணிப்பு கேமரா, மற்றும் ரூ.10 ஆயிரத்து 800-ஐ திருடிசென்று விட்டனர். இதன் மாத்த மதிப்பு ரூ.1 லட்சத்து 63 ஆயிரத்து 800 ஆகும்.

வலைவீச்சு

இது குறித்து கடை உரிமையாளா சேக்அலாவுதீன் பாபநாசம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.தஞ்சையில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகள் பதிவு செய்யப்பட்டன. இது குறித்து பாபநாசம் போலீசார்வழக்குப்பதிவு செய்து கடையின் பூட்டை உடைத்து பொருட்கள் மற்றும் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com