ஓசூரில் சரக்கு ரெயில் தடம் புரண்டதால் பரபரப்பு - சீரமைப்புப் பணிகள் தீவிரம்

விபத்து ஏற்பட்ட பகுதியில், தற்போது சீரமைப்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பெங்களூர் பான்ஸ்வாடி என்ற பகுதியில் இருந்து சேலம் நோக்கி சென்ற பெட்ரோல் டேங்கர் சரக்கு ரெயில் தடம் புரண்டது. புதியதாக போடப்பட்ட ரெயில் பாதையில் சென்றபோது திடீரென 18 எண் கொண்ட டேங்கர் தடம் புரண்டதாக கூறப்படுகிறது.
அதிர்ஷ்டவசமாக பெரிய விபத்து எதுவும் ஏற்படவில்லை. இதுபற்றி உடனடியாக ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, ரெயில்வே நிர்வாகம் மற்ற டேங்கர்களை பத்திரமாக பிரித்து பெங்களூரு அனுப்பி வைத்தனர். விபத்து ஏற்பட்ட பகுதியில், தற்போது சீரமைப்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்த சரக்கு ரெயில் தடம்புரண்டதால் சில ரெயில்களின் சேவைகள் அங்கு பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story






