பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 4 பேர் மீது குண்டர் சட்டம்

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள திருநாவுக்கரசு உள்பட 4 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 4 பேர் மீது குண்டர் சட்டம்
Published on

பொள்ளாச்சி,

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மாணவிகளிடம் பேஸ்புக் மூலம் நண்பர்களாக பழகி காதலிப்பதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்து அவர்களிடம் பணம் பறித்துள்ளனர். இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவங்களை வீடியோவும் எடுத்து உள்ளனர்.

இதில் சபரிராஜன் (வயது 25), திருநாவுக்கரசு (25), சதீஷ் (28), வசந்தகுமார் (27) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கோவையில் இந்த கும்பலிடம் சிக்கி பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் காவல் நிலையம் சென்ற பின்னர்தான் இவ்விவகாரம் தொடர்பான அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த கொடூரக் கும்பல் 200-க்கும் அதிகமான பெண்களை காதல் என்ற வலையை வீசி கொடூரமான முறையில் நடத்தியதும், வீடியோ எடுத்ததும் தெரிய வந்தது. இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.

இந்த நிலையில், மேற்கூறிய வழக்கில் தொடர்புடைய 4 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com