மதுரையில் 398 சிலிண்டர்களை பதுக்கிய 2 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது

சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க அவசர ஏற்பாடாக எஸ்மா எனப்படும் அத்தியாவசிய பொருட்கள் பராமரிப்பு சட்டத்தை நாடு முழுவதும் மத்திய அரசு அமல்படுத்தி உள்ளது.
மதுரையில் 398 சிலிண்டர்களை பதுக்கிய 2 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது
Published on

சென்னை,

ஈரான் போர் காரணமாக உலகம் முழுவதும் எரிபொருள்களுக்கு தட்டுப்பாடு உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இந்தியாவில் வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டருக்கு முன்னுரிமை அளித்தும், வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டருக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக இந்தியாவில் வணிக பயன்பட்டிற்கான கியாஸ் சிலிண்டர் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் சிலிண்டர்களை பதுக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க அவசர ஏற்பாடாக எஸ்மா எனப்படும் அத்தியாவசிய பொருட்கள் பராமரிப்பு சட்டத்தை நாடு முழுவதும் மத்திய அரசு அமல்படுத்தி உள்ளது.

இந்தநிலையில், மதுரையில் 398 சிலிண்டர்களை கள்ளச்சந்தையில் விற்க பதுக்கலில் ஈடுபட்ட இருவர் மீது குண்டாஸ் பாய்ந்தது.

கோவில்பாப்பாகுடி பகுதியில் சிலிண்டர்களை பதுக்கிய பழனி, மதன்குமார் அத்தியாவசியப் பண்டங்கள் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். 2 பேரிடமிருந்தும் 163 மானிய சிலிண்டர்கள், 235 வணிக பயன்பாட்டு சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

நாடு முழுவதும் எஸ்மா சட்டம் அமல்படுத்திய நிலையில் சிலிண்டர் பதுக்கலுக்கு தமிழகத்தில் முதல் முறையாக அவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com