அரசு கலை, அறிவியல் படிப்பு மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு இன்றுடன் நிறைவு


அரசு கலை, அறிவியல் படிப்பு மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு இன்றுடன் நிறைவு
x
தினத்தந்தி 27 May 2025 3:22 AM IST (Updated: 27 May 2025 4:03 AM IST)
t-max-icont-min-icon

இதுவரை 2.15 லட்சம் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.

சென்னை,

தமிழகத்தில் 176 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தநிலையில் இந்த கல்லூரிகளில் நடப்பாண்டு மாணவர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்ப பதிவு கடந்த 7-ம் தேதி தொடங்கியது. இதுவரையில் இளங்கலை படிப்புகளுக்கு 2 லட்சத்து 15 ஆயிரத்து 809 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.

இந்நிலையில், ஏற்கனவே அறிவித்த படி அரசு கலை, அறிவியல் படிப்பு மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு இன்றுடன் நிறைவடைய உள்ளது. இருப்பினும் விண்ணப்பிக்க, கால அவகாசம் நீட்டிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

மாணவர்கள், www.tngasa.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

1 More update

Next Story