

சென்னை,
கொரோனா தொற்று காரணமாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கான விண்ணப்பப்பதிவு இந்த ஆண்டு ஆன்லைனில் நடைபெறும் என்று உயர் கல்வித்துறை அறிவித்தது. அதன்படி, விண்ணப்பப்பதிவு கடந்த மாதம் (ஜூலை) 20-ந் தேதி தொடங்கி 31-ந் தேதி வரை நடைபெற்றது. 109 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள 92 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களுக்கு சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்ப பதிவு செய்திருந்தனர். இந்தநிலையில், மாணவர்கள் தங்களுடைய மதிப்பெண் பட்டியலை பதிவேற்றம் செய்வதற்கு காலஅவகாசம் வழங்க கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்று, சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய இன்று (திங்கட்கிழமை) வரை அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது. எனவே, இதுவரை சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யாத மாணவர்கள் இன்று அதை செய்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.