சென்னை ஐகோர்ட்டு அருகே அரசு பேருந்து விபத்து: 13 கார்கள் சேதம்

விபத்து தொடர்பாக போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை ஐகோர்ட்டு அருகே அரசு பேருந்து விபத்து: 13 கார்கள் சேதம்
Published on: 

சென்னை,

சென்னை திருவிடந்தை - தீவுத்திடல் வழித்தடத்தில் 109A எண் கொண்ட அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்து இன்று ராஜாஜி சாலையில் இருந்து பூக்கடை நோக்கி வந்து கொண்டிருந்தது. சென்னை ஐகோர்ட்டு அருகே வந்துகொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து செண்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சென்னை ஐகோர்ட்டு முன்பு நிறுத்தப்பட்டிருந்த வழக்கறிஞர்களின் 13-க்கும் மேற்பட்ட கார்கள் சேதமடைந்தன. விபத்து ஏற்பட்ட உடனே பேருந்தில் இருந்து பயணிகள் இறக்கி விடப்பட்டனர். இந்த விபத்து தொடர்பாக போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com