கோவையில் அரசு பஸ் - கார் மோதி விபத்து: ஒருவர் பலி

மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
கோவையில் அரசு பஸ் - கார் மோதி விபத்து: ஒருவர் பலி
Published on

கோவை,

கோவை மாவட்டம் சத்தியமங்கலம் தாளவாடியிலிருந்து அரசு பஸ் ஒன்று கோவையை நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது கோவில்பாளையம் அருகே வந்த போது எதிரில் வந்த கார் மீது பஸ் மோதியது. இதில் காரை ஓட்டி வந்த அன் னூரை சேர்ந்த ஹரிசங்கர் வயது 28) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

காரில் இருந்த ஹரீஸ்(21), மல்லிகார்ஜூனன் ஆகிய 2 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கோவில்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலியான ஹரிசங்கரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர். காயம் அடைந்த 2 பேரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இது தொடர்பாக பஸ் டிரைவர் தமிழரசன்(43) கைது செய்யப்பட்டு உள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com