அரசு பஸ் மோதி ஒருவர் பலி

செங்கம் அருகே அரசு பஸ் மோதி ஒருவர் பலி
அரசு பஸ் மோதி ஒருவர் பலி
Published on

செங்கம்

செங்கம் அருகே கரியமங்கலம் பகுதியில் நேற்று இரவு அடையாளம் தெரியாத ஒருவர் நடந்து சென்றார்.

அப்போது சேலத்தில் இருந்து திருவண்ணாமலை நோக்கி அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. ஜேப்பியார் பால்பண்ணை அருகே வந்த போது நடந்து சென்றவர் சாலையை கடக்க முயன்றுள்ளார்.

அப்போது அரசு பஸ் அவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் ஏசுராஜ் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்று விசாரணை நடத்தி வருகிறார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com