பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர் பணியிடை நீக்கம்

ஓட்டுநர் மற்றும் நடத்துநரை பணியிடை நீக்கம் செய்து போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
செங்கல்பட்டு,
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 16ஆம் தேதி, பனையூர் சுங்கச்சாவடியில் சென்னையிலிருந்து சிதம்பரம் நோக்கி செல்லும் அரசுப் பேருந்தில் ஏற முயன்றுள்ளார். ஆனால், பேருந்து அங்கு நிற்காததால் பேருந்தை வழிமறித்து கேட்டதற்கு ஓட்டுநரும் நடத்துனரும் அந்தப் பெண்ணை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.
இது குறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஓட்டுநர் மற்றும் நடத்துநரை பணியிடை நீக்கம் செய்து போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
Related Tags :
Next Story






