அரசு பஸ் கண்ணாடி உடைப்பு

அரசு பஸ் கண்ணாடி உடைத்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரசு பஸ் கண்ணாடி உடைப்பு
Published on

செஞ்சி, 

சென்னையில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பஸ் ஒன்று திருவண்ணாமலை நோக்கி சென்று கொண்டிருந்தது. செஞ்சி அரசு போக்குவரத்து கழக பணிமனை எதிரே வந்தபோது, அங்கு அதே பணிமனையில் அரசு பஸ் கண்டக்டராக பணியாற்றி வரும் விநாயக சுந்தரம் என்பவர் நின்று கொண்டிருந்தார். அவர் திடீரென கல்வீசி அந்த பஸ்சின் கண்ணாடியை உடைத்ததாக தெரிகிறது. இதில் பஸ் டிரைவர் முருகன் (வயது 45) காயமடைந்தார். இதில் பஸ்சை நிறுத்தாததால் கல்வீசி கண்ணாடியை விநாயகசுந்தரம் உடைத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் கண்டக்டர் விநாயக சுந்தரம் மீது செஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்த விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com