அரசுப் பேருந்து வாய்க்காலில் கவிழ்ந்து விபத்து - 15 பேர் காயம்

விபத்து ஏற்பட்ட உடனே பேருந்தில் இருந்த பயணிகள் அலறி கூச்சலிட்டனர்.
அரசுப் பேருந்து வாய்க்காலில் கவிழ்ந்து விபத்து - 15 பேர் காயம்
Published on

திருவாரூர்,

திருச்சியில் இருந்து 50-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு காரைக்கால் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. திருவாரூர் மாவட்டம் கொல்லுமாங்குடி அருகே பேரளம் பகுதியில் பேருந்து சென்றபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் உள்ள வாய்க்காலில் பாய்ந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

விபத்து ஏற்பட்ட உடனே பேருந்தில் இருந்த பயணிகள் அலறி கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு அப்பகுதி பொதுமக்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். பேருந்தின் உள்ளே சிக்கியிருந்த பயணிகளை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இந்த விபத்தில் பெண்கள் உள்பட 15 பேர் காயமடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் காயமடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com