சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பஸ்; அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்...!

சாலையோர பள்ளத்தில் அரசு பஸ் கவிழ்ந்த விபத்தில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பி உள்ளனர்.
சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பஸ்; அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்...!
Published on

கயத்தாறு,

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை கொளக்குட்டான்குறிச்சி வழியாக அரசு பஸ் இயங்கி வருகின்றது. இந்த பஸ் இன்று மதியம் வழக்கம் போல் கழுகுமலையில் பயணிகளை இறக்கிவிட்டுவிட்டு கோவில்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தது.

பஸ் வெங்கடசலாபுரம் அருகே வந்தபோது மூதாட்டி ஒருவர் சாலையை கடக்க முயன்றுள்ளார். இதனால் மூதாட்டி மீது பஸ் மோதாமல் இருக்க டிரைவர் பஸ்சை திருப்பி உள்ளார்.

இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.

அதிர்ஷ்டவசமாக பஸ்சில் குறைவான பயணிகள் இருந்ததால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்ப்படவில்லை.

பின்னர் இந்த விபத்து குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பஸ்சில் சிக்கி இருந்த பயணிகளை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com