புதுக்கோட்டை அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து: 22 பயணிகள் காயம்

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து: 22 பயணிகள் காயம்
அரசுப் பேருந்து
Published on: 

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சாலையில் இன்று காலை அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 22 பயணிகள் காயமடைந்தனர்.

அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் பழனி நோக்கி அரசுப் பேருந்து ஒன்று இன்று (வியாழக்கிழமை) காலை புறப்பட்டுச் சென்றது. அந்த பேருந்தில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சாலையில் அன்னவாசல் அருகே உள்ள பெருஞ்சுனை என்ற இடத்தில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த வாகனத்திற்கு ஓட்டுநர் வழிவிட முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

மீட்புப் பணிகள்

விபத்தில் பேருந்து கவிழ்ந்ததும் உள்ளே இருந்த பயணிகள் இடிபாடுகளுக்குள் சிக்கி அலறினர். சத்தம் கேட்டு ஓடிவந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் தீயணைப்பு மீட்புப் படையினர் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர். பேருந்தின் பின்பக்க கண்ணாடியை உடைத்து உள்ளே சிக்கியிருந்த பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

சிகிச்சை -விசாரணை

இந்த விபத்தில் 22 பயணிகள் காயமடைந்தனர். மீட்கப்பட்ட அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அருகிலுள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X