குழந்தைகள் தினத்தில் பள்ளி மாணவர்களுக்கு கேக் வழங்க அரசு முடிவு

பள்ளிகளில் கலை, இலக்கிய போட்டிகள் நடத்தப்படுகின்றன.
குழந்தைகள் தினத்தில் பள்ளி மாணவர்களுக்கு கேக் வழங்க அரசு முடிவு
Published on: 

சென்னை,

முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவின் பிறந்தநாள் நவம்பர் 14-ந் தேதி . இந்தியாவின் பிரதமராக 17 ஆண்டுகாலம் பதவி வகித்து இந்தியாவின் சிற்பியாக அழைக்கப்பட்ட ஜவகர்லால் நேருவின் பிறந்தநாள் தேசிய குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.

குழந்தைகளின் நலன், கல்வி மற்றும் வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில் ஆண்டு தோறும் நவம்பர் 14-ம் தேதி குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் குழந்தைகளுக்கு வாழ்த்துகளை தெரிவிப்பதுடன், குழந்தைகளின் பிரியமான நேரு மாமாவுக்கு அரசியல் கடந்து பல்வேறு தரப்பினரும் மரியாதை செலுத்துகின்றனர். மேலும், குழந்தைகளிடையே உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில் பள்ளிகளில் கலை, இலக்கிய போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இந்த நிலையில், குழந்தைகள் தினத்தையொட்டி அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கேக் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான டெண்டரை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அதில் ரூ.9.27 கோடி செலவில், 61,84,566 ஸ்பாஞ்ச் கேக் துண்டுகள் வழங்கப்பட உள்ளன; ஒவ்வொரு கேக் துண்டும் 45 கிராம் எடை கொண்டதாக இருக்க வேண்டும் என்றும் கேக்குகள் பெறப்படும்போது மொத்த காலாவதி காலத்தில் குறைந்தது 30 நாட்கள் மீதமிருக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com