திருவண்ணாமலை: சொத்துக்காக தாயை கொடூரமாக தாக்கிய அரசு டாக்டர் கைது

ஆனந்தன் வந்தவாசி நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் அரசு டாக்டராக பணியில் உள்ளார்.

திருவண்ணாமலை: சொத்துக்காக தாயை கொடூரமாக தாக்கிய அரசு டாக்டர் கைது
Published on

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே அரசு டாக்டர் ஒருவர் சொத்துக்காக தனது தாயையே கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 50) வந்தவாசி ஆரம்ப சுகாதார நிலையத்தில் அரசு டாக்டராக பணி புரிந்து வருகிறார். இவர் தனது தாய் மல்லிகாவிடம் சொத்து கேட்டு தொடர்ந்து தகராறு செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக தனது தாய் மல்லிகாவை ஆனந்தன் தொடர்ந்து தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

மல்லிகா தரப்பில் பலமுறை புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டி உள்ள ஆனந்தின் சகோதரர் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார்.

இதனை தொடர்ந்து வந்தவாசி அருகே சொத்துத் தகராறில் பெற்ற தாயை கொடூரமாகத் தாக்கிய சிசிடிவி காட்சிகள் பரவிய நிலையில், அரசு டாக்டரான ஆனந்தன் கைது செய்யப்பட்டுள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com