அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ஓட்டப்பிடாரத்தில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
Published on

ஓட்டப்பிடாரம்:

ஓட்டப்பாடாரம் யூனியன் அலுவலம் முன்பு மணிப்பூரில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சம்பவத்தையும், இதை தடுக்க தவறிய மணிப்பூர் அரசை கண்டித்தும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க வட்டாரத் தலைவர் திருமலை தலைமை தாங்கினார். இதில் சங்க மாவட்டத் துணைத் தலைவர் அன்பு செல்வன், யூனியன் கூடுதல் ஆணையாளர் ராமராஜன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பிரிமன் உட்பட அரசு ஊழியர்கள், சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com