அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல்லில், அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
Published on

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், திண்டுக்கல் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் முபாரக்அலி தலைமை தாங்கினார். இதில் மாவட்ட பொருளாளர் குப்புசாமி, வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் ஜான்பாஸ்டின் டல்லஸ், சத்துணவு ஊழியர் சங்க மாநில செயலாளர் ஜெசி, நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்க மாநில துணை தலைவர் ராஜமாணிக்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை பெறுவதற்கு மிகவும் குறைவான தொகையே வழங்கப்படுகிறது. எனவே மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இலவசமாக சிகிச்சை பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com