

சென்னை,
மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளதாவது:-
பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது ஒரு சில போராட்டங்கள் பற்றி கருத்துக் கூற நேரிடும் போது- நான் கூறிய அரசு ஊழியர்கள் போராட்டம் பற்றிய கருத்து தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டுவிட்டது.
உரிமைக்காக போராடுபவர்களை என்றைக்கும் மதிப்பவன் நான். ஏனென்றால் நானே அமைச்சர் ஆவதற்கு முன்பு ஒரு யூனியன் தலைவராக இருந்தவன் தான். அதிலும் குறிப்பாக - அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல அரசு ஊழியர்களின் உழைப்பு எவ்வளவு முக்கியமானது என்பதை நன்கு உணர்ந்தவன்.
அதனால் எனது கருத்தினை அரசு ஊழியர்கள் யாரும் தவறுதலாக புரிந்து கொள்ள வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.