அரசு ஊழியர் சங்க கூட்டம்

அரசு ஊழியர் சங்க கூட்டம்

சிவகிரியில் அரசு ஊழியர் சங்க கூட்டம் நடந்தது.
Published on

சிவகிரி:

சிவகிரி தாலுகா அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க சிவகிரி வட்ட கிளை பேரவை கூட்டம் நடந்தது. கிளை தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பதாகையை மாவட்ட தலைவர் திருமலை முருகன், அகில இந்திய மாநில அரசு ஊழியர் சங்க பதாகையை மாவட்ட செயலாளர் துரைசிங் ஆகியோர் வைத்தனர். செயலாளர் மற்றும் பொருளாளர் அறிக்கை எழுத்துப்பூர்வமாக சமர்ப்பிக்கப்பட்டது.

மாவட்ட பொருளாளர் வேல்ராஜன், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் மாடசாமி, தமிழ்நாடு நில அளவை ஒன்றிணைப்பு மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன், தமிழ்நாடு ஓய்வு பெற்ற ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் ராஜ் ஆகியோர் வாழ்த்தி பேசினர். கூட்டத்தில் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் பல்வேறு துறைகளை சேர்ந்த ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com