

கொள்ளிடம்:
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி கொள்ளிடத்தில், அரசு ஊழியர் சங்கத்தினர் பிரசார இயக்கம் நடத்தினர்.
பிரசார இயக்கம்
கொள்ளிடம் ஊராட்சி அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஊழியர் சந்திப்பு மற்றும் பிரசார இயக்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சிவபழனி தலைமை தாங்கினார்.புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி உயர்வை மாநில அரசு ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும்.
4 லட்சம் காலிப்பணியிடங்கள்
அரசுத்துறையில் ஆட் குறைப்பு நடவடிக்கையை கைவிட வேண்டும். தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள 4 லட்சம் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிரசார இயக்கம் நடந்தது.இதில் அலுவலர்கள், நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கியும் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.